நண்பரின் மோட்டார் சைக்கிளை விற்றவர் கைது


நண்பரின் மோட்டார் சைக்கிளை விற்றவர் கைது
x

நண்பரின் மோட்டார் சைக்கிளை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் வெள்ளாளத்தெருவில் புதிதாக ஜவுளிக்கடை ஒன்று திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளிக்கடையில் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை பெரியார் நகரை சேர்ந்த டேவிட் விக்டர் மற்றும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று செல்வகுமாரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை டேவிட் விக்டர் வாங்கிக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து செல்வகுமார் அவ்வப்போது கேட்டுள்ளார். அப்போது செல்வகுமாரின் மோட்டார் சைக்கிளை டேவிட் விக்டர் விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரியலூர் போலீசில் செல்வகுமார் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனசெல்வன் வழக்குப்பதிவு செய்து டேவிட் விக்டர் விற்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, அவரை கைது செய்தார். இதையடுத்து அரியலூர் நீதிமன்றத்தில் டேவிட் விக்டர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story