பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
தஞ்சாவூர்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 7-வது வட்டப்பேரவை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தொடங்கி வைத்தார். இதில் வட்ட துணை தலைவர்கள் கலைச்செல்வி, சண்முகம் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு அனைத்து ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story