தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ..!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ..!
x

ஒரு கிராம் தங்கம் ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது .

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி ஒரு கிராம் ரூ.81-க்கும், ஒரு கிலோ ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story