வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை கடந்தது...!


வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை கடந்தது...!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 2 Dec 2023 10:16 AM IST (Updated: 2 Dec 2023 10:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஒரு சவரன் ஆபரணதங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து ரூ.47,320க்கும், ஒரு கிராம் ரூ.5,915க்கும் விற்பனையாகி வருகிறது. அடுத்த வாரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 ஆயிரத்தை எட்டும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது,

அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.83.50-க்கும் ஒரு கிலோ ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story