தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை.. நேற்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பம்
பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாடமுடியாத அளவுக்கு வெப்பநிலை நிலவுகிறது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற்து. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாடமுடியாத அளவுக்கு வெப்பநிலை நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. அதாவது திருச்சி, மதுரை நகரம், வேலூர், நாமக்கல், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையம் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story