கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (என்கிற) ஜெயமணிக்குமார்(வயது 32). இவர் கடந்த 10-ந் தேதி இரவு 11 மணியளவில் அதே ஊரை சேர்ந்த சேட்டு என்கிற பாலசுப்ரமணியன்(58) என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது ஏற்கனவே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கியதில் கொலைமுயற்சி வழக்கும், தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது.

ஜெயமணி தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் வெளியே வந்தால் மேலும் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட கூடும் என்பதாலும் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசோமசுந்தரம் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று ஜெயமணி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். அதற்கான ஆணை பிரதிகள் மத்திய சிறைக்கு வழங்கப்பட்டது.


Next Story