எலச்சிபாளையம் பகுதியில்வணிக நிறுவனங்களில் தொடர் திருட்டுபோலீஸ் சூப்பிரண்டிடம் மனு


எலச்சிபாளையம் பகுதியில்வணிக நிறுவனங்களில் தொடர் திருட்டுபோலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 27 July 2023 12:30 AM IST (Updated: 27 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், எலச்சிபாளையம் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு, திருட்டு சம்பவங்கள் தொடர்பான புகார்களுக்கு போலீசார் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கும் என உறுதியளித்தார். மேலும் வணிகர்கள் தங்கள் வணிக நிறுவன நுழைவுவாயிலில் சாலைகளை பதிவு செய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.


Next Story