மகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்


மகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
x

மகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி தெற்கு கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து நாள்தோறும் சாமி வீதியுலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையடுத்து மகாமாரியம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், திரவியபொடி, விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாமாரியம்மனுக்கு பட்டு துணி அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க மகா மாரியம்மன் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தில் வந்தடைந்தது. பின்னர் மகா மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் தத்தனூர் கீழவெளி கிராமத்தை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story