'என்னால் பலன் பெற்றவர்கள் பலர் இன்று எதிரணியில் இருக்கிறார்கள்' - அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு


என்னால் பலன் பெற்றவர்கள் பலர் இன்று எதிரணியில் இருக்கிறார்கள் - அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2023 2:41 PM IST (Updated: 6 Aug 2023 3:15 PM IST)
t-max-icont-min-icon

எதிரணியில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் தனக்கு நண்பர்களாக இருந்தவர்கள் தான் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

சென்னை,

சென்னை வானகரத்தில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தலைவராக சி.கோபாலன், துணைத் தலைவராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் கட்சி தொண்டர்களுக்கு டி.டி.வி. தினகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "என்னால் பலன் பெற்றவர்கள் பலர் இன்று எதிரணியில் இருக்கிறார்கள். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு எதிராக கவுரவர்கள் இருந்தது போல், இன்று அங்கு இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் எனக்கு நண்பர்களாக, என்னால் பலன் பெற்றவர்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்தவர்கள்தான். இதை அவர்களால் கூட மறுக்க முடியாது" என்று தெரிவித்தார்.


Next Story