திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனி வருஷாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம் நடந்தது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கும், குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் காலை 8.55 மணிக்கு மூலவர் விமானம் கலசத்திற்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை அம்மாள் ஆகிய விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.