திருநெல்வேலி தமிழ் இலக்கியம், வீரம் செறிந்த மண் - அமைச்சர் துரைமுருகன்


திருநெல்வேலி தமிழ் இலக்கியம், வீரம் செறிந்த மண் - அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 2 Sep 2022 2:55 PM GMT (Updated: 2 Sep 2022 2:56 PM GMT)

திருநெல்வேலி தமிழ் இலக்கியம், வீரம் செறிந்த மண் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்

அப்போது அவர் கூறியதாவது,

குப்பை இல்லா நகரத்தை உருவாக்கும் சவாலை அமைச்சர் நேரு ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகள். அடுத்த பட்ஜெட்டுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக அமையும்.

அமைச்சர் நேரு, செய்தி விளம்பரத்துறை, உணவுத்துறை, மின்சார துறை,போக்குவரத்து துறைதற்போது நகர்ப்புற வளர்ச்சி துறை என 10-க்கும் மேற்பட்ட இலாகாக்களுக்கு அமைச்சராக பதவி வகித்துள்ளார். இத்தனை துறையையும் பார்த்த ஒரே அமைச்சர் அவர்தான் எந்த துறையாக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவார்.

நெல்லை மாவட்டம் எனக்கு பிடித்த மாவட்டமாகும். நான் 1989-ல் அமைச்சரானபோது முதன் முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் தான் வந்தேன். அது போல் இப்போதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த மாவட்டத்திற்கும் செல்லவில்லை. நெல்லை மாவட்டத்திற்கு தான் முதன்முறையாக வந்துள்ளேன்.

திருநெல்வேலி தமிழ் இலக்கியம், வீரம் செறிந்த மண். தாமிரபரணி தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்கலாம் தீர்த்தம் போன்றதாகும் என்றார்.


Next Story