மேம்பால பணியால் போக்குவரத்து பாதிப்பு
மேம்பால பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த 3 மாதங்களாக எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதேபோல் சிறுவாச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இத்தகைய காரணத்தினால் வார விடுமுறை நாட்களில் சிறுவாச்சூரில் இருந்து விஜயகோபாலபுரம் வரை வாகனங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதே சமயம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.