விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 8 Sep 2023 6:28 PM GMT (Updated: 8 Sep 2023 6:29 PM GMT)

விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலமாக அங்கக வேளாண்மை சான்றிதழ் பெறும் முறை குறித்த பயிற்சி மேலப்புலியூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியை வேளாண்மை இணை இயக்குனர் கீதா தலைமை தாங்கி நடத்தினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் அமிர்தவல்லி பயிர் பாதுகாப்பு மேலாண்மை பற்றி சிறப்புரையாற்றினார். இப்பயிற்சியினை விதைச்சான்று அலுவலர் ராஜேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் இளையராஜா ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இப்பயிற்சியில் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற இயற்கை முறையிலான பயிர் மேலாண்மை உத்திகள் பற்றி விதைச்சான்று அலுவலர் ராஜேந்திரன் பேசினார். அறுவடையான விளை பொருட்களை சந்தைப்படுத்த அங்கக வேளாண்மை சான்றிதழ் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு உதவி வேளாண்மை அலுவலர் இளையராஜா எடுத்துக் கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) அலுவலர்கள் கீர்த்தனா, கவிநிலவு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story