ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
ஓசூர்:
ஒடிசாவில் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஓசூர், ஊத்தங்கரையில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
ரெயில் விபத்து
ஒடிசாவில் நேற்று முன்தினம் நடந்த கோர ரெயில் விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஓசூரில், தேசிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில், மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முனிராஜ், கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகே, மேற்கு மாவட்ட தலைவர் முரளிதான் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரவீண்குமார், கீர்த்தி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ெரயில் விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு தி.மு.க. சார்பில் 2 நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, நகர செயலாளர் பாபு சிவக்குமார், அவை தலைவர் தணிகை குமரன், பொருளாளர் கதிர்வேல், டாக்டர் கந்தசாமி, கிளை செயலாளர் தீபக், கவுன்சிலர்கள் சுமித்ரா தவமணி, அபிபுன்னிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.