லாரி மோதி 5 மின்கம்பங்கள் சேதம்


லாரி மோதி 5 மின்கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

மயிலத்தில் லாரி மோதிய விபத்தில் 5 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

விழுப்புரம்

மயிலம்,

சென்னையில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது 44) என்பவர் ஓட்டி சென்றார். மயிலம் பஸ் நிறுத்தத்தை கடந்து சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்கம்பத்தை சீரமைத்து மீண்டும் மின்வினியோகம் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story