தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அஞ்சலி


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அஞ்சலி
x

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.


Next Story