ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்
x

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னப்பொண்ணு முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் சுகந்தி, மாநில துணைத் தலைவர் சங்கரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சுகந்தி கூறுகையில், வருகிற மார்ச் 8-ந்தேதி சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படும். மேலும் அன்றைய தினம் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த நூத்தப்பூர் மாணவியின் வழக்கு முடிந்து நியாயம் கிடைக்கும் வரை மாதர் சங்கம் அதற்கு ஆதரவாக செயல்படும், என்றார்.


Next Story