மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா


மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா
x

மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 15 அடி நீளம் கொண்ட அலகுகளை வாயில் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, பொங்கல் மற்றும் மாவிளக்கு படையல் செய்து சாமி கும்பிட்டனர். இதில் பசும்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story