திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்கள் நாளை வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
Related Tags :
Next Story