தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. வெட்டிக்கொலை - குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்


தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. வெட்டிக்கொலை - குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்
x

உயிரிழந்த வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸ், அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்த வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி., குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தரப்படும் என உறுதியளித்தார்.



Next Story