வேலூர்: பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழப்பு.! சாலை வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர்,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ளஅள்ளேரி மலை பகுதியில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அதே பகுதியில் ஒன்றரை வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், தற்போது பாம்பு கடித்து மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஏற்கனவே, ஒரு குழந்தை இறந்தபோது சடலத்தை பெற்றோர் கையில் சுமந்து சென்றனர். தற்போது மீண்டும் அதே அள்ளேரி கிராமத்தில் சோகம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story