தரைமட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க ஏற்பாடு


தரைமட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க ஏற்பாடு
x

திருப்பரங்குன்றத்தில் தரை மட்ட நீர்தேக்க தொட்டியை கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட ஏற்பாடு நடந்துவருகிறது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் தரை மட்ட நீர்தேக்க தொட்டியை கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட ஏற்பாடு நடந்துவருகிறது.

குடிநீர் தொட்டி

திருப்பரங்குன்றத்தில் வசித்து வரக்கூடிய சுமார் 60 ஆயிரம் மக்கள் மற்றும் முருகன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு என்று முதல்முறையாக கடந்த 1978-ம் ஆண்டில் குடிநீர் வினியோக திட்டத்தின்கீழ் விராட்டிபத்தில் 9 ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக படுகையில் 6 ஆழ்துளை கிணறு உருவாக்கப் ்பட்டது.

திருப்பரங்குன்றம் மூலக்கரையில் நீரேற்றுநிலையமும், கூடல் மலை பகுதியில் 9 லட்சம் வீதம் 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மெகா தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. நீரேற்றுநிலையத்தில் இருந்து 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு தினமும் 2 வேளை பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் கிருதுமால் நதியில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதை அடுத்து நிலத்தடி நீர் குறைந்தது. அதனால் தண்ணீர் வரத்து குறைந்தது

வலியுறுத்தல்

இந்த நிலையில் மாடக்குளம் கண்மாய் கரை, தென்கால் கண்மாய் உள்பகுதி என்று அடுத்தடுத்து ஆழ்துளை கிணறு உருவாக்கப்பட்ட போதிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு பேரணை- சிற்றணையில் உருவாக்கப்பட்ட கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் சேமிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அது பொதுமக்களுக்கு தேவைக்கு ஏற்ப இல்லாத நிலையே உள்ளது. எனவே குடிநீர் வசதிக்காக புதிய திட்டம் கொண்டுவர நடவடிக்கை வேண்டும். ஹார்விப்பட்டி வழியாக செல்லக்கூடிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை திருப்பரங்குன்றத்திற்கும் நீடிப்பு செய்ய வேண்டும்.கூடல்மலை பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் நிலையை அறிந்து அதற்கு தகுந்த கட்டமைப்பு பாதுகாப்பு அமைக்கப்பட வேண்டும்என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆய்வு

இந்த நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தரைமட்ட தொட்டியை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் நேரிடையாக தரைமட்ட தொட்டியை ஆய்வு செய்தார். இதனையடுத்து உதவி செயற்பொறியாளர் மயிலேறி நாதன் மேற்பார்வையில் திறந்துகிடந்த தொட்டியின் மேல் பகுதி மூடப்பட்டது. ராட்சத குழாயில் அடைப்பட்டு இருந்த மண்அள்ளப்பட்டது. மேலும் பிளிசிங்பவுடர் தெளிக்கப்பட்டது. இதற்கிடையில் தரைமட்ட தொட்டிக்கு கட்டமைப்பு பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப் ்பட்டது.


Related Tags :
Next Story