கழிவுநீரில் பன்றிகள் செத்துமிதப்பதால் சுகாதாரக்கேடு


கழிவுநீரில் பன்றிகள் செத்துமிதப்பதால் சுகாதாரக்கேடு
x

கழிவுநீரில் பன்றிகள் செத்துமிதப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்

கேணிக்கரை,

ராமநாதபுரம் நகராட்சி 7 மற்றும் 8-வது வார்டை சேர்ந்த கேணிக்கரை பைசல் நகர் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. மேலும் தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இந்த பகுதியை திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தபகுதியில் உள்ள பாதாள சாக்கடை தொட்டிகள் நிரம்பி தெருக்களில் வழிந் தோடுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலைகளில் குளம்போல தேங்கி நிற்கிறது. கடந்த பல மாதங்களாக பாதாளச் சாக்கடை கழிவு நீர் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் அடிக்கடி செத்து இந்த கழிவு நீரில் மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story