‘ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தர போறாரு...' என்ற தலைப்பில் தி.மு.க. தேர்தல் பிரசார பாடல் வீடியோ


‘ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தர போறாரு... என்ற தலைப்பில் தி.மு.க. தேர்தல் பிரசார பாடல் வீடியோ
x
தினத்தந்தி 2 March 2021 7:18 AM IST (Updated: 2 March 2021 7:18 AM IST)
t-max-icont-min-icon

‘ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தர போறாரு...' என்ற தலைப்பில் தி.மு.க. தேர்தல் பிரசார பாடல் வீடியோ அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் வெளியிட்டார்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் ‘ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தர போறாரு...' என்ற தலைப்பில் பிரசார பாடல் தயாரிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின்போது இந்த பாடல் ஒலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாடல் பிரசார வீடியோவாக தயாரிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பிரசார பாடல் வீடியோவை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.

இந்த பிரசார பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் எழுதி உள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜெரால்டு இசையமைத்துள்ளார். பாடகர் அந்தோணிதாசன்-பாடகி வைஷ்ணவி ஆகியோர் பாடியுள்ளனர் என்று துரைமுருகன் பேசும்போது தெரிவித்தார்.

Next Story