‘விமர்சனம் செய்வது மட்டுமே எங்கள் வேலை இல்லை’; சீத்தாராம் யெச்சூரி பேச்சு


‘விமர்சனம் செய்வது மட்டுமே எங்கள் வேலை இல்லை’; சீத்தாராம் யெச்சூரி பேச்சு
x
தினத்தந்தி 7 March 2021 8:55 AM IST (Updated: 7 March 2021 8:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மதுரவாயலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்க வைத்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை முறியடிப்பது தமிழகத்தை காப்பது மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே காப்பதாகும். அடுத்து வரும் அரசு, ஜனநாயகத்தை காக்கும் அரசாக அமைய வேண்டும்.

கடந்த 6 ஆண்டுகளில் பா.ஜ.க. தேசத்தின் இயற்கை வளங்களை சூறையாடி வருகிறது. மக்கள் மீது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சுமைகளை சுமத்தி வருகிறது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் ஆக்கப்பட்டு உள்ளது.

அரசை விமர்ச்சிப்பவர்கள் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். விமர்சனம் செய்வது மட்டுமே எங்கள் வேலை இல்லை. மாற்றம் எங்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.பீம்ராவ், வாசுகி, சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story