அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 16 March 2021 7:35 AM GMT (Updated: 16 March 2021 7:35 AM GMT)

அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது,

* 16,400 கோடி ரூபாய் செலவில் காவேரி குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்

* ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்

* அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.

என்றார்.

Next Story