தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வியாழக்கிழமை முதல் தேர்தல் பிரசாரம்


தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வியாழக்கிழமை முதல் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 23 March 2021 11:59 AM GMT (Updated: 2021-03-23T17:29:39+05:30)

சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வியாழக்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சென்னை

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார்.

 இதை தொடர்ந்து விஜயகாந்த் வியாழக்கிழமை மாலை கட்சி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணியில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையிலும், திருத்தணி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பொதட்டூர்பேட்டையிலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தே.மு.தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story