தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திருச்சி லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் சவுந்திரபாண்டியன், கதிரவன், ஸ்டாலின் குமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
சென்னை,
திராவிடர் கழக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திருச்சி லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் சவுந்திரபாண்டியன், கதிரவன், ஸ்டாலின் குமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், 'மத்திய - மாநில ஆட்சிகளால் நமது பிள்ளைகளின் கல்வி உரிமை சூறையாடப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விண்ணை முட்டிவிட்டன. இந்தக் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். அ.தி.மு.க.வை டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி வருகிறார்கள். மீண்டும் நாம் ஏமாந்து போனால் காலம் காலமாக நாம் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும். கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் கொத்தடிமை ஆட்சியை அகற்ற அனைவரும் தயாராக வேண்டும்' என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story