கோவை வால்பாறை தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த அ.தி.மு.க வேட்பாளர்
கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை
கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் வால்பாறை தனித் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. இத்தொகுதியில் மொத்தமே 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதி சுற்றில் வாக்காளர்கள் பெற்ற வாக்கு விவரம்
டி.கே.அமுல்கந்தசாமி (அதிமுக) - 66,474
ஆறுமுகம் (சிபிஐ) - 53,309
வெற்றி வித்தியாசம் 13,165.
Related Tags :
Next Story