பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி


பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி
x
தினத்தந்தி 12 April 2019 10:44 AM IST (Updated: 12 April 2019 10:44 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் நகரில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர்.

கராச்சி,

பாகிஸ்தானின் குவட்டா நகரப் பகுதியில் உள்ள ஹசர்கன்ச் என்ற இடத்தில் காய்கறி மார்க்கெட் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும்  இந்த மார்க்கெட்டில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

 இந்த தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களில் 7 பேர் அங்குள்ள ஹசரா இனத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

மார்க்கெட் அருகே இருந்த கட்டிடம் ஒன்று வெடிகுண்டு வெடித்ததில் சேதம் அடைந்தது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
1 More update

Next Story