காஷ்மீர் விவகாரத்தில் மோடி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் - இம்ரான் கான்


காஷ்மீர் விவகாரத்தில் மோடி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் - இம்ரான் கான்
x
தினத்தந்தி 14 Aug 2019 5:03 PM GMT (Updated: 14 Aug 2019 5:03 PM GMT)

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்திய பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

முசாபர்பாத்,

பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். அப்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய அவர், “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். இந்த முடிவு மோடிக்கும், பா.ஜ.க.விற்கும் மிகப்பெரிய நஷ்டத்தை விளைவிக்கும், ஏனென்றால் அவர்கள் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி விட்டார்கள். 

அமெரிக்க ஜனாதிபதியிடமும், சர்வதேச ஒருங்கிணைந்த இஸ்லாமிய அமைப்பிடமும் காஷ்மீர் விவகாரம் குறித்து முறையிட்டேன். ஆனால் அவர்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து தெரிந்திருக்கவில்லை. நாங்கள் ஐ.நா.விடமும் சர்வதேச நீதிமன்றத்திடமும் இந்த விவகாரத்தை கொண்டு செல்வோம். 

இரண்டாம் உலகப் போரின் போது நடந்த இனப்படுகொலை மீண்டும் ஒரு முறை நடப்பதற்கான அழிவு பாதையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயணித்து கொண்டு இருக்கிறது.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளும், ஹிட்லரின் நாஜி கொள்கைகளும் ஒன்று தான். இந்த கொள்கையால் தான் உலகில் பல போர்களும், இனப்படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையும், மதசார்பின்மையும் அழிந்து தற்போது அங்கே பயங்கரவாதம் பெருகிவிட்டது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா அதன் அரசியலமைப்புக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எதிராக செயல்பட்டுள்ளது. எப்போது ஒரு நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குலைந்து மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அப்போது அது ஒரு நிலையற்ற குடியரசாக மாறிவிடுகிறது” என்று அவர் கூறினார்.

Next Story