உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் 25-ந் தேதி தேர்தல் + "||" + Parliament of Sri Lanka dissolved - President announces Gotabhaya Rajapaksa

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் 25-ந் தேதி தேர்தல்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் 25-ந் தேதி தேர்தல்
இன்னும் 6 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிரடியாக கலைத்தார். அங்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.
கொழும்பு,

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபரும், தனது சகோதரருமான மகிந்த ராஜபக்சேவை அவர் நியமித்தார்.


கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றவுடனே, இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4½ ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் வரை கலைக்க முடியாது என்பதால், இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நேற்று முன்தினம் 4½ ஆண்டுகளை எட்டியது. இதையொட்டி நாடாளுமன்ற கலைப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக கடந்த 29-ந் தேதி அவர் கூறுகையில், ‘இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால், அரசுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அதிபர் தனது அரசியல்சாசன அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைப்பார்’ என தெரிவித்தார்.

அதன்படி இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதற்கான ஆணையில் நேற்று இரவு அவர் கையெழுத்து போட்டார்.

அத்துடன் புதிய தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி இலங்கையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12 முதல் 19-ந் தேதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு இடங்களை பெற விரும்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் இருந்து வரவழைத்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 கோடி போதை பொருட்கள் பறிமுதல் தொண்டியில் 9 பேர் அதிரடி கைது
ஆப்கானிஸ்தானில் இருந்து வரவழைத்து தொண்டியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 கோடி போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
2. இலங்கையில் இருந்து 700 இந்தியர்களுடன் 1-ந் தேதி தூத்துக்குடி வரும் கடற்படை கப்பல் - கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு
இலங்கையில் சிக்கி தவிக்கும் 700 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு கடற்படை கப்பல் வருகிற 1-ந்தேதி தூத்துக்குடிக்கு வருகிறது. அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
3. இலங்கையில் பயணம் செய்து விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயார்: வாரிய நிர்வாகி தகவல்
மத்திய அரசு அனுமதி அளித்தால் ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இந்திய அணி தயாராக உள்ளது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார்.
4. இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு நீட்டிப்பு
இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. இலங்கையில் இருந்து அகதிகள் போர்வையில் கொரோனா பாதித்தவர்கள் வருவதை தடுக்க தனுஷ்கோடி கடலில் தீவிர கண்காணிப்பு
இலங்கையில் இருந்து அகதிகள்,கடத்தல்காரர்கள் போர்வையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வருவதை கண்காணிக்க தனுஷ்கோடி கடலில் 3 கப்பல்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.