தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - பிரதமர் மோடி அறிவிப்பு + "||" + we have decided to repeal all three farm laws: PM Narendra Modi

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - பிரதமர் மோடி அறிவிப்பு

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - பிரதமர் மோடி அறிவிப்பு
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். 

அவர்கள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒராண்டிற்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கும் திரும்பபெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டு மக்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரை...!
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
2. அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
3. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பலனளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
4. பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் சந்திப்பு
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.
5. திரிபுரா: வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் வழங்குகிறார்
திரிபுராவின் கிராமப்புற வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.