#லைவ் அப்டேட்ஸ்: புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், போரில் இறங்கியிருக்க மாட்டார் -போரிஸ் ஜான்சன்


#லைவ் அப்டேட்ஸ்: புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், போரில் இறங்கியிருக்க மாட்டார் -போரிஸ் ஜான்சன்
x

AFP

தினத்தந்தி 28 Jun 2022 8:19 PM GMT (Updated: 29 Jun 2022 4:21 PM GMT)

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.


Live Updates

  • ரஷியாவின் அச்சுறுத்தல்: ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் குவிப்பு - ஜோ படைன்
    29 Jun 2022 4:21 PM GMT

    ரஷியாவின் அச்சுறுத்தல்: ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் குவிப்பு - ஜோ படைன்

    ரஷியாவின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் அமெரிக்க படைகளை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசிய பைடன், நேட்டோ படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். போலந்தில் ஒரு நிரந்தர தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளதாகக் கூறிய பைடன், இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு கூடுதல் படைகள் அனுப்பப்படும் என குறிப்பிட்டார்.

  • 29 Jun 2022 1:45 PM GMT

    போர் முடிய எத்தனைக் காலமானாலும் உக்ரைனுக்கு ஆதரவு தொடரும்.. ஜி 7 நாடுகள் தலைவர்கள் உறுதி..!

    எத்தனைக் காலம் ஆனாலும் ரஷியாவிடமிருந்து உக்ரைனை பாதுகாக்க துணை நிற்போம் என ஜி 7 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

    ரஷியாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைத் தடுத்து நிறுத்தவும் உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் ரஷியாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதியைத் தடை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருப்புக் கடல் வழியாக உக்ரைனுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்ல உதவவும் ஜி 7 நாடுகள் உறுதியளித்துள்ளது.

  • ரஷிய அதிபர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அவர் போரில் இறங்கியிருக்க மாட்டார் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
    29 Jun 2022 8:37 AM GMT

    ரஷிய அதிபர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அவர் போரில் இறங்கியிருக்க மாட்டார் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

    புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அஆனால் அவர் அப்படி இல்லை, ஆனால் அவர் அப்படி இருந்திருந்தால், அவர் ஒரு பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான படையெடுப்பு மற்றும் வன்முறைப் போரில் அவர் ஈடுபட்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

    புதினின் உக்ரைன் படையெடுப்பு நச்சு ஆண்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு சிறந்த கல்வி மற்றும் "அதிகாரப் பதவிகளில் அதிக பங்கு அளிக்க வேண்டும்.

    "நிச்சயமாக மக்கள் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இப்போதைக்கு அது நடக்கவாய்ப்பில்லை. எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை . புதின் எந்த சமாதானத்தையும் முன்வைக்கவில்லை எனறு கூறினார்.

  • 29 Jun 2022 6:07 AM GMT

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு பயங்கரவாதி என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

  • ரஷியாவிடமிருந்து உக்ரைனை பாதுகாக்க துணை நிற்போம் - ஜி 7 நாடுகள் தீர்மானம்
    29 Jun 2022 4:41 AM GMT

    ரஷியாவிடமிருந்து உக்ரைனை பாதுகாக்க துணை நிற்போம் - ஜி 7 நாடுகள் தீர்மானம்

    ரஷியாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைத் தடுத்து நிறுத்தவும் உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் ரஷியாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதியைத் தடை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருப்புக் கடல் வழியாக உக்ரைனுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்ல உதவவும் ஜி 7 நாடுகள் உறுதியளித்துள்ளது. 

  • 29 Jun 2022 12:31 AM GMT


    கிரெமென்சுக் வணிக வளாகத்தில் கொடிய ஏவுகணை தாக்குதலின் வீடியோவை ஜெலென்ஸ்கி வெளியிட்டார்.

    உக்ரைனின் மத்திய நகரமான க்ரெமென்சுக்கில் உள்ள நெரிசலான வணிக வளாகத்தில் ரஷிய ஏவுகணை நடத்திய தாக்குதலின் வீடியோவை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது இரவு உரையில் காட்டினார்.




  • 28 Jun 2022 11:38 PM GMT


    வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் - ஜெலெனஸ்கி தகவல்

    இதுதொடர்பாக அவர் தனது உரையில் கூறும்போது, “மத்திய நகரமான கிரெமென்சுக் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 59 பேர் காயமடைந்தனர்.

    அமைதியான நகரத்தில், வழக்கமாக செயல்பட்டுக்கொண்டிருந்த வணிக வளாகத்தில் முடிந்தவரை பலரைக் கொல்ல ரஷிய ராணுவத்தினர் விரும்பினர்” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

  • 28 Jun 2022 11:08 PM GMT


    போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷியா 2,800 ஏவுகணைகளை ஏவியுள்ளது - ஜெலெனஸ்கி தகவல் 


Next Story