திருநங்கைகளுக்கு இனி அமெரிக்க ராணுவத்தில் இடம் இல்லை: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு


திருநங்கைகளுக்கு இனி அமெரிக்க ராணுவத்தில் இடம் இல்லை: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 July 2017 3:35 AM GMT (Updated: 2017-07-27T09:05:41+05:30)

திருநங்கைகளுக்கு இனி அமெரிக்க ராணுவத்தில் இடம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். முந்தைய அதிபர் ஒபாமாவின் சில திட்டங்களை ரத்து செய்தார்.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிரம்ப் தனது டுடிவிட்டரில், “என்னுடைய ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அரசு அனுமதிக்காது என்பதை பரிந்துரைக்கிறேன். நம்முடைய ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது. நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story