60 பயணிகளுடன் சென்ற ஈரானிய விமானம் மலைப்பகுதியில் மோதியது


60 பயணிகளுடன் சென்ற ஈரானிய விமானம் மலைப்பகுதியில் மோதியது
x
தினத்தந்தி 18 Feb 2018 8:34 AM GMT (Updated: 18 Feb 2018 8:34 AM GMT)

60 பயணிகளுடன் சென்ற ஈரானிய பயணிகள் விமானம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. #Iran #PlaneCrash



தெக்ரான்,


விமானம் ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து இஸ்பகான் மாகாணத்தில் உள்ள யசூஜ் பகுதியை நோக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள் சிக்கியது. ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் செமிரோம் என்ற பகுதியில் விபத்து நேரிட்டு உள்ளது. விமானம் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து அனைத்து அவசரகால மீட்பு குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
“விமானத்தில் 50 முதல் 60 வரையிலான பயணிகள் இருந்தனர், அனைத்து அவசரக்கால மீட்பு குழுவும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது,” என ஈரான் அவசரக்கால மீட்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது.

விமானம் விபத்துக்குள் சிக்கிய பகுதிக்கு மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அப்பகுதியை அணுக முடியாது திரும்பியது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

60 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் சென்ற விமானம் காலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது என அந்நாட்டு பாராளுமன்ற தேசிய பாதுகாப்பு தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானம் விபத்துக்குள் உள்ளான பகுதி மலைப்பாங்கானது என்பதால் ஆம்புலன்ஸ்களை அனுப்புவது என்பது இயலாத காரியம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story