எங்களுடைய ‘ஒரு இஞ்ச்’ இடத்தையும் விடமாட்டோம் 'இரத்தக்களரி போருக்கு' தயார் சீனா சொல்கிறது


எங்களுடைய ‘ஒரு இஞ்ச்’ இடத்தையும் விடமாட்டோம் இரத்தக்களரி போருக்கு தயார் சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 20 March 2018 12:33 PM GMT (Updated: 20 March 2018 12:33 PM GMT)

எங்களுடைய ‘ஒரு இஞ்ச்’ இடத்தையும் விடமாட்டோம், 'இரத்தக்களரி போருக்கு' தயார் என ஜின்பிங் கூறிஉள்ளார். #XiJinping


பெய்ஜிங்,


சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜீ ஜின்பிங் (வயது 64) 2வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதற்காக கடந்த மார்ச் 11-ந்தேதி அதிபர் மற்றும் துணை அதிபருக்கான 2 முறை பதவி வகிக்கும் வரம்பு பற்றிய அரசியலமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் வாழ்நாள் முழுவதும் ஜின்பிங் அதிபராக பதவி வகித்திடுவார். 2-வது முறையாக அதிபராகி உள்ள ஜீ ஜின்பிங், சீனா தன்னுடைய பகுதியில் ஒரு இஞ்ச் இடத்தை கூட பிற நாட்டிற்கு விடுக்கொடுக்காது, உலகில் தன்னுடைய நிலையை நிறுத்திக்கொள்ள இரத்தம் தெரிக்கும் போருக்கும் சீனா தயாராக உள்ளது என கூறிஉள்ளார். 

 பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்-காங், தற்போது தன்னாட்சி முறையில் செயல்பட்டு வருகிறது. அதுபோல தைவான் தீவுகளும் சுயாட்சி முறையில் இயங்கி வருகிறது. ஆனால் இந்த நிலப்பரப்பு அனைத்தும் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது. சீனா தன்னை சுற்றிலும் உள்ள அண்டைய நாடுகளுடன் எல்லைப் பிரச்சனையை கொண்டு உள்ளது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசுகையில் எந்த நாடு என்பதை குறிப்பிடவில்லை. 

சீனா, கிழக்கு சீன கடல்பகுதியில் ஜப்பான் பகுதிக்கு உரிமை கொண்டாடுகிறது, தெற்கு சீன கடல் பகுதியிலும் மோதல் போக்கையை கொள்கிறது. 

தென் சீனக்கடல் பகுதி வழியாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது. 

இந்த பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா, அங்கு செயற்கை தீவுக்கூட்டங்களை உருவாக்கி ராணுவ நிலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கடல் எல்லையில் அமைந்துள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் தென் சீனக்கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன. இந்தியாவுடனும் சீனா எல்லைப்பிரச்சனையை கொண்டு உள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்திற்கு தொடர்ந்து உரிமை கொண்டாடி எல்லையில் அடாவடியிலும் ஈடுகிறது. சமீபத்திய டோக்லாம் சம்பவமும் சீனாவின் அடாவடியால் மோதல் போக்காகியது, பின்னர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது.

Next Story