டொனால்டு டிரம்ப் தென் கொரிய அதிபருடன் வரும் 22ந்தேதி வெள்ளை மாளிகையில் சந்திப்பு


டொனால்டு டிரம்ப் தென் கொரிய அதிபருடன் வரும் 22ந்தேதி வெள்ளை மாளிகையில் சந்திப்பு
x
தினத்தந்தி 5 May 2018 10:33 AM GMT (Updated: 5 May 2018 10:33 AM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வெள்ளை மாளிகையில் வரும் 22ந்தேதி சந்தித்து பேசுகிறார். #DonaldTrump

வாஷிங்டன்,

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பினை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது.  ஏவுகணை பரிசோதனைகளையும் நடத்தியது.  தென்கொரியாவும் இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்து வந்தது.

தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகள் பல ஆண்டுகளாக விரோதிகளாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசி கொண்டனர்.

அந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் சில முக்கிய முடிவுகளை எடுத்தனர் என கூறப்பட்டது. அதற்கு முன்பிருந்தே வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வரும் 22ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்.  
இந்த சந்திப்பில் கிம் ஜாங் அன்னுடனான சமீபத்திய உச்சி மாநாடு சந்திப்பு பற்றி டொனால்டு டிரம்பிடம் மூன் விளக்குகிறார்.

தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்வார்கள் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறியுள்ளார்.

Next Story