டுவிட்டரில் பிரபலம் அடைந்து வரும் மூக்கை நுழைக்கும் நாய் சவால்


டுவிட்டரில் பிரபலம் அடைந்து வரும் மூக்கை நுழைக்கும் நாய் சவால்
x
தினத்தந்தி 29 Aug 2018 3:12 PM GMT (Updated: 29 Aug 2018 3:12 PM GMT)

அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் சமூக வலை தளங்களில் வளர்ப்பு பிராணிகளுடனான மூக்கு சவால் பிரபலம் அடைந்து வருகிறது.

சமீப காலங்களில் நீல திமிங்கலம், கிகி நடனம், மோமோ சவால் ஆகிய ஆபத்து நிறைந்த சவால்கள் இன்டர்நெட்டில் வலம் வந்தன.  இதனால் உலகம் முழுவதும் உள்ள இன்டர்நெட் பயன்படுத்தும் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் பாதிப்பிற்கு ஆளாகினர்.  சிலர் மரணம் அடைந்தும் உள்ளனர்.

இந்த நிலையில், சமூக வலை தளங்களில் வளர்ப்பு பிராணிகளுடனான மூக்கு சவால் பிரபலம் அடைந்து வருகிறது.

இந்த சவாலில் ஈடுபடுவோர் வளர்ப்பு பிராணி ஒன்றை வைத்திருக்க வேண்டும்.  இவற்றில் நாய் வைத்திருப்போர் எளிதில் இந்த சவாலில் ஈடுபடலாம்.  ஒரு குறிப்பிட்ட பொருளின் உள்ளே அல்லது நாயின் உரிமையாளர் தனது கைகளால் உருவாக்கும் ஒரு வடிவத்தின் உள்ளே தனது மூக்கை நாய் நுழைக்க வேண்டும்.

இந்த வடிவங்கள் ஒரு முக்கோணம், வட்டம் அல்லது இருதய வடிவில் இருக்கலாம்.  இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சிலர் சாப்பிடும் பிரெட்டின் உள்ளேயோ அல்லது டஃப்நட் என்ற உணவு பண்டத்தின் உள்ளேயோ தங்களது செல்ல பிராணியான நாயின் மூக்கை நுழைக்க செய்யும் வீடியோக்களும் வெளிவந்து உள்ளன.

சில நாய்கள் சரியாக செய்துள்ளன.  சில தோல்வியும் அடைந்து உள்ளன.  சில மிக அழகாக உரிமையாளர் சொல்வது போல் நடந்துள்ளன.  அதற்கான வீடியோ லிங்க் கீழே உள்ளது.

#SnootChallenge


Next Story