கிம் ஜாங் உன் - உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது : அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்


கிம் ஜாங் உன் - உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது : அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:47 AM GMT (Updated: 8 Oct 2018 4:47 AM GMT)

கிம் ஜாங் உன் - உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார்.

பியாங்யாங்,

சமீப காலமாக அமெரிக்காவுடன் நல்லுறவை கடைபிடிக்க வடகொரியா முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, இரு நாட்டு பிரநிதிகளும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, வடகொரியா சென்றுள்ளார். நேற்று பாம்பியோ, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினார். 

வடகொரிய தலைவர் பியாங்கியொங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, இரண்டு மணி நேரம் நடைபெற்றது. சந்திப்புக்கு பிறகு, நேரடியாக தென்கொரியா சென்றார். தென்கொரிய சென்ற பின், அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க வந்த மைக் பாம்பியோவிடம் செய்தியாளர்கள், வடகொரியா தலைவருடனான சந்திப்பு குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த மைக் பாம்பியோ, வடகொரிய தலைவருடனான சந்திப்பு, சிறப்பானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்ததாக தெரிவித்தார். 

பின்னர் தென்கொரிய அரசு செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- “மைக்கேல் பாம்பியோ மற்றும் கிம் ஜாங்-உன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது, கிம் ஜாங்குக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது குறித்தும் இருவரும் விவாதித்தார்கள்” என்றார்.

Next Story