உலக செய்திகள்

கென்யாவில் பேருந்து விபத்து; 40 பேர் பலி + "||" + More than 40 dead in Kenya bus accident

கென்யாவில் பேருந்து விபத்து; 40 பேர் பலி

கென்யாவில் பேருந்து விபத்து; 40 பேர் பலி
கென்யாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர்.

நைரோபி,

கென்யாவின் மேற்கே நைரோபியில் இருந்து காகமேகா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இதில் 52 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியில் சென்றபொழுது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 40 பேர் பலியாகினர்.  எனினும் பேருந்தின் மேற்கூரை உடைந்து நொறுங்கியுள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை கூடும் என கூறப்படுகிறது.

கென்யாவில் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 3 ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர்.  இந்த எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் பேருந்து மற்றும் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2016ம் ஆண்டு எரிபொருள் நிரப்பிய லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதி கூட்டம் நிறைந்த நெடுஞ்சாலையில் வெடித்துள்ளது.  இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
2. ஈரோடு வன பகுதியில் பேருந்தை நோக்கி வந்த யானை கூட்டம்; அச்சத்தில் உறைந்த பயணிகள்
ஈரோடு வன பகுதியில் பேருந்தை நோக்கி வந்த யானை கூட்டத்தினை கண்டு பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
3. சபரிமலைக்கு மாலை அணிந்து கன்னியாகுமரிக்கு வந்த வெளிநாட்டு பெண் பக்தர்களால் பரபரப்பு
சபரிமலைக்கு மாலை அணிந்து கன்னியாகுமரிக்கு வந்த வெளிநாட்டு பெண் பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
4. புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
புத்தாண்டையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
5. காங்கோ நாட்டில் லாரி மீது பேருந்து மோதல்; 50 பேர் பலி
காங்கோ நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 50 பேர் பலியாகி உள்ளனர்.