உலக செய்திகள்

உகாண்டாவில் கனமழையால் நில சரிவு; 34 பேர் பலி + "||" + At least 34 die in Uganda mudslides triggered by heavy rains

உகாண்டாவில் கனமழையால் நில சரிவு; 34 பேர் பலி

உகாண்டாவில் கனமழையால் நில சரிவு; 34  பேர் பலி
உகாண்டா நாட்டில் ஏற்பட்ட கனமழையால் நில சரிவு ஏற்பட்டு 34 பேர் பலியாகினர்.
கம்பாலா,

உகாண்டா நாட்டின் கிழக்கே எல்கான் மலை பகுதியில் கனமழை பெய்து வந்தது.  இதனை அடுத்து ஏற்பட்ட நில சரிவால் மக்கள் மண்ணில் புதைந்து போனார்கள்.  இதில் 3 கிராமங்களில் உள்ள வீடுகள் புதைந்து போயின.

இதுபற்றி பேரிடர் மேலாண் கழக உயரதிகாரி ஓவர் கூறும்பொழுது, ஆறு ஒன்று கரையை உடைத்து கொண்டு பாய்ந்ததில் பாலம் ஒன்று மூழ்கி போனது.  அருகிலுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.  சிலர் காணாமல் போயுள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் கடும் வெள்ளம்; பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
2. பெய்ட்டி புயல் கரையை கடந்தது: ஏனாமில் பலத்த காற்றுடன் கனமழை
பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது ஏனாமில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5. சென்னையில் இரவு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் இரவு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.