ஜோர்டானில் கனமழைக்கு 11 பேர் பலி; 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் வெளியேற்றம்


ஜோர்டானில் கனமழைக்கு 11 பேர் பலி; 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 10 Nov 2018 11:52 AM GMT (Updated: 10 Nov 2018 11:52 AM GMT)

ஜோர்டானில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.

அம்மான்,

ஜோர்டான் நாட்டில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 11 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு உதவ சென்றுள்ளன.

இந்த கனமழையால் பெட்ரா நகரின் சில பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள வாடி மூசா பாலைவன பகுதிகளில் 4 மீட்டருக்கும் கூடுதலாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதில் வாகனங்கள் பல மூழ்கியபடி உள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து பாலைவன நகரான பெட்ராவில் இருந்து ஏறக்குறைய 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

Next Story