உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவில் பாலி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
* சூடான் நாட்டில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, இடிபாடுகளில் அவர்கள் சிக்கினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இன்னும் 10 பேரை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.


* இந்தோனேசியாவில் பாலி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

* ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாணத்தில் சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒரு வாகனம் சிக்கியது. அந்த வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிறுவனங்களுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையேயான நிதி உறவு குறித்து தெரிவிக்க வேண்டும் என்று, டிரம்பிடம் நாடாளுமன்ற செனட் சபை எம்.பி.க்கள் 11 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* நடப்பு ஆண்டின் முடிவில் உலகமெங்கும் உள்ள மக்களில் பாதிப்பேர், அதாவது சுமார் 800 கோடிப்பேர் இணையதள வசதியை பயன்படுத்துவார்கள் என ஐ.நா. தொலை தொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது.

* ஜப்பானில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணி அமர்த்துவதற்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

* அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து ராபர்ட் முல்லர் குழுவின் சிறப்பு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்குழு, விசாரணை தொடர்பான முக்கிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களில் தான் குற்றமற்றவர் என கூறப்பட்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டு அதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

* பிரேசில் நாட்டில் 2 வங்கிகளில் நடந்த கொள்ளை முயற்சியில் போலீசாருக்கும், கொள்ளையருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டைகள் நடந்துள்ளன. இவற்றில் 6 பிணைக்கைதிகள் உள்பட 12 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலியான பிணைக்கைதிகளில் 5 பேர் ஒரே குடும்பத்தினர் ஆவார்கள்.

* அமெரிக்காவில் நிதி ஒதுக்கீடு இன்றி அரசு அலுவலகங்கள் மூடப்படாமல் தடுக்கும் வகையில் 2 வார காலத்துக்கான செலவின மசோதாவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்டார்.