சோமாலியாவில் அமெரிக்க வான்தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலி


சோமாலியாவில் அமெரிக்க வான்தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 21 Dec 2018 11:15 PM GMT (Updated: 21 Dec 2018 9:24 PM GMT)

சோமாலியாவில் அமெரிக்க வான்தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலியாயினர்.

மொகாதீசு,

சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவத்தினரையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க சோமாலிய ராணுவம் போராடி வருகிறது. மற்றொருபுறம் சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப்படைகளுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் அங்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் மொகாதீசுவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பெலட் அமின் என்கிற இடத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அடுத்தடுத்து 2 முறை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 11 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதே சமயம் இந்த வான்தாக்குதல்களில் பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story