பாகிஸ்தானுக்காக சீனா 4 நவீன போர் கப்பல்களை தயாரிக்க உள்ளது - தகவல்


பாகிஸ்தானுக்காக சீனா 4 நவீன போர் கப்பல்களை தயாரிக்க உள்ளது - தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2019 8:23 AM GMT (Updated: 2 Jan 2019 8:23 AM GMT)

பாகிஸ்தானுக்காக சீனா நான்கு மிக நவீன கடற்படை போர் கப்பல்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீஜிங்,

பாகிஸ்தானுக்கு மிக அதிக அளவு ஆயுதம் வழங்கும் நாடாக சீனா இருந்து வருகிறது. இருநாடுகளும் ஒன்றிணைந்த ஜேஎஎஃப்-தண்டர் என்ற ஒற்றை என்ஜின் பன்முக போர் விமானத்தை தயாரிக்கின்றன.

இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் தனது ஆற்றலை உறுதிப்படுத்துவதற்காக ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பாகமாக அதன் கூட்டாளி பாகிஸ்தானுக்கு சீனா நான்கு மிக நவீன கடற்படை போர் கப்பல்களை தயாரித்து கொடுக்க உள்ளது. சீன அரசு கப்பல் நிர்வாகக்குழு கூறியதாக சீன டெய்லி இதனை தெரிவித்து உள்ளது.

இந்த நவீன கடற்படை போர் கப்பல்களில் நவீன கண்டறிதல் மற்றும் ஆயுதம் கொண்ட அமைப்புகள், கப்பல் எதிர்ப்பு அமைப்பு  நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமான பாதுகாப்பு நடவடிக்கை அமைப்புகள் இதில் இடம் பெற்று இருக்கும். இந்த கப்பலில் சீன கடற்படை மிகவும் மேம்பட்ட வழிகாட்டுதல் ஏவுகணை ஃப்ரீகேட் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

கப்பல் எந்த வகை என குறிப்பிடவில்லை. ஆனால் அது ஷாங்காயில் உள்ள  ஹூடாங்-சோங்ஹுவா துறைமுகத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கப்பல் வகுப்பு வகை 054AP. இது  சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) கடற்படைத் தளத்தின் 054A வகை அடிப்படையிலானது என பாகிஸ்தானிய கடற்படை கூறியதாக சீனா டெய்லி மேற்கோள்காட்டி உள்ளது.

Next Story