உலக செய்திகள்

தலீபான் தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி + "||" + Four soldiers including Talipan commander were shot dead by security forces in Pakistan

தலீபான் தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி

தலீபான் தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி
பாகிஸ்தானில் காஜி பம்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பெஷாவர், 

பாதுகாப்பு படையினர்  அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அவர்களைக் கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் முடிவில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தின் ஜூமா பஜார் பகுதியில் ஷியா பிரிவினரின் வழிபாட்டுத்தலத்தில் கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 சீக்கியர்கள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியான இஸ்லாம் உள்ளிட்ட 4 பேர்தான் காஜி பம்ப் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச்சண்டையில் பலியாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது. பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய மொகிபுல்லா என்பவரும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கட்டாய வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியுடன் இன்று மோதல்
அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் இன்று பலம் வாய்ந்த நியூசிலாந்துடன் மல்லுகட்டுகிறது.
2. இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு
இலங்கையில் அவசர நிலையை திடீரென மேலும் ஒரு மாதம் நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
3. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு
பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
4. பாகிஸ்தான் அணிக்கு தடை கேட்டு கோர்ட்டில் மனு
இன்ஜமாம் உல்–ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டியை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
5. சீனா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரிக்கிறது : இந்தியா அதே நிலையில் உள்ளது
சீனா- பாகிஸ்தான் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. இந்தியா அதே நிலையில் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.