உலக செய்திகள்

மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி + "||" + In Mexico 2 killed in plane crash

மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி

மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி
மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலியாயினர்.
மெக்சிகோ சிட்டி, 

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. 

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் சபபோன் நகரில் 3 ரகசிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
2. மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி
மெக்சிகோவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
3. மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு; 2 போலீசார் பலி
மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் பலியாயினர். அங்கு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.
4. மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: விருந்தில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ நாட்டில் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
5. மெக்சிகோ: இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; 14 பேர் பலி
மெக்சிகோவில் இரவு விடுதியில் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியாகினர். #MexicoCity