ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் புகுந்த 23 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி என அச்சம்


ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் புகுந்த 23 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி என அச்சம்
x
தினத்தந்தி 14 Feb 2019 1:29 PM GMT (Updated: 14 Feb 2019 1:29 PM GMT)

ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் புகுந்த 23 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டில் விலை மதிப்புமிக்க பிளாட்டினம், வைரம், தங்கம், நிலக்கரி மற்றும் தாமிரம் போன்றவை அதிகளவில் உள்ளன.  இதனால் அவற்றை எடுப்பதற்காக சுரங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் ஹராரே நகருக்கு தென்மேற்கே கடோமா நகரில் தங்க சுரங்கங்கள் சில செயல்படாமல் இருந்து வந்துள்ளன.

இதற்குள் சிலர் புகுந்துள்ளனர்.  இந்நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அவர்களில் 23 பேர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.  மீட்பு பணியாளர்கள் நீரை வெளியேற்றி அவர்களை மீட்க அல்லது உடலை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி சுரங்கம் ஒன்றின் செய்தி தொடர்பு அதிகாரி வில்சன் என்பவர் கூறும்பொழுது, கடந்த செவ்வாய் கிழமை இரவு பெய்த கனமழையால் அணையின் சுவரில் இருந்து வெளியேறிய நீரில் 23 பேர் சிக்கியுள்ளனர் என சக பணியாளர்கள் அலறினர்.  இந்த சுரங்கங்களில் ஒன்று எங்களுடையது.  இது நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.  இதனால் மனிதநேய அடிப்படையில் நாங்கள் உதவி செய்து வருகிறோம் என கூறினார்.

ஆனால் மாவட்ட நிர்வாகி முஜுலு கூறும்பொழுது, சுரங்க உரிமையாளர்களை தவிர்ப்பதற்காக சட்டவிரோத முறையில் சுரங்க பணியாளர்கள் சிலர் அணை பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு முழு அறிக்கையையும் வெளியிட்ட பின்னரே சம்பவம் பற்றிய தகவலை உறுதிப்படுத்த முடியும்.

Next Story