இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு


இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 11:25 AM GMT (Updated: 28 Feb 2019 12:18 PM GMT)

அமைதிக்கான நடவடிக்கையாக இந்திய விமானி நாளை விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும் என நேற்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில்  முடிவெடுக்கப்படும்  என  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்  வெளியிட்டு உள்ளது. அபிநந்தன் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளார் எனவும் தகவல் தெரிவித்து உள்ளது.

இது குறித்து  இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முமகது பைசல் கூறும்போது,

பைலட் விஷயத்தை இந்தியா எங்களிடம் கொண்டு வந்து உள்ளது. இரண்டு நாட்களில் நாங்கள் எந்த விதமான நிபந்தனை விதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என கூறினார்.

இந்த நிலையில்  அபிநந்தன்  நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர்  இம்ரான் கான் அறிவித்து உள்ளார்.  
 அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது:-

பாகிஸ்தான் ஊடகங்கள் போர் குறித்தான எதையும் கூறவில்லை. ஆனால், இந்தியாவில் போர் குறித்து  இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடையச் செய்துள்ளது.

நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை முன் வைத்துள்ளோம். ஆனால் அவர்களது தரப்பிலிருந்து வரும் செய்திகள் நல்ல விதத்தில் இல்லை.

இந்திய மக்கள் தற்போதுள்ள அரசின் போர் பற்றிய  தூண்டுதலை ஆதரிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் எல்லாவற்றுக்கும் காரணம் காஷ்மீர். நான் இந்திய மக்களிடம் கடந்த நான்கு வருடங்களாக காஷ்மீரில் நடப்பது குறித்த கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

காஷ்மீரில் உள்நாட்டுப் போராட்டம் நடந்து வருகிறது. காஷ்மீர் தலைவர்கள் ஒருகட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரிவினையை கேட்கவில்லை.

ஆனால், இந்தியா இழைத்த கொடுமைகள் காரணமாக அவர்கள் இப்போது சுதந்திரம் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பார்கள். ஏன் 19 வயது இளைஞர் மனித வெடிகுண்டாக மாற வேண்டும்? காஷ்மீரில் நடப்பவை அனைத்துக்கும் பாகிஸ்தானை எவ்வளவு காலம் பழிசுமத்த முடியும். அதுமட்டுமில்லாது ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியும்?

நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க இந்திய பிரமர் மோடிக்கு  நேற்று மாலையிலிருந்து தொலைபேசியில் முயற்சித்தேன் என்று கூறினார்.

Next Story